சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 5-ல் மாதவரம் பால் பண்ணை நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை நிலையம் வரை 10 உயர்மட்ட நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் Jakson Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் (அமைப்புகள் மற்றும் இயக்கம் ராஜேஷ் சதுர்வேதி), Jakson Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் அங்கூர் கோயல் ஆகியோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர்கள் எஸ்.ராமசுப்பு, எஸ்.கே.நடராஜன், கூடுதல் இணை பொதுமேலாளர் எல். அபித் அலி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.