spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி- அமைச்சர் ஆய்வு

இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி- அமைச்சர் ஆய்வு

-

- Advertisement -

செஸ் ஒலிம்பியாட்டில் செய்யப்பட்டிருந்ததைப் போல, சர்வதேச புத்தக கண்காட்சியிலும் வசதிகள் இருக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.

Image

we-r-hiring

சென்னை நந்தனம் ஓய்.எம் சி ஏ மைதானத்தில் சென்னை புத்தக கண்காட்சி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், கடந்த வாரம் துவக்கி வைக்கப்பட்டு, சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் மேலும் ஒரு முக்கிய அம்சமாய், இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச புத்தககண்காட்சி வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சுமார் 40 நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். இதற்கான அரங்குகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரங்குகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டார். சர்வதேச தரத்துடனான அரங்குகளை அமைக்கும் பணிகள் குறித்தும் அப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகளை அவர் வழங்கினார். குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் பெரும்பாலான பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில், அரங்குகள் அமைந்துள்ள இடங்களின் வரைப்படத்தினை வைத்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது, மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்டில் செய்யப்பட்டிருந்ததைப் போல, சர்வதேச புத்தக கண்காட்சியிலும் வசதிகள் இருக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

MUST READ