Homeசெய்திகள்சென்னைசென்னை- கோவை வந்தே பாரத் ரயிலை மோடி தொடங்கிவைத்தார்

சென்னை- கோவை வந்தே பாரத் ரயிலை மோடி தொடங்கிவைத்தார்

-

சென்னை- கோவை வந்தே பாரத் ரயிலை மோடி தொடங்கிவைத்தார்

சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Image

ரயில் சேவையில் பயணிகளின் வசதிக்காக பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் ஒன்றிய ரயில்வே துறை சார்பில் வந்தே பாரத் என்னும் அதிவிரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னையில் இருந்து மைசூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயன்பாட்டில் உள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஸ்னவ், ஆளுநர் ரவி, ஆகியோர் பங்கேற்றனர்.

Image

முன்னதாக ரயிலுக்குள் சென்று பார்வையிட்ட பிரதமர் , ரயிலில் பயணம் மேற்கொண்ட ஐஐடி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். ரயில் சேவை தொடங்கிய போது, மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்களும் தேசிய கொடி அசைத்து வரவேற்றனர்.

 

MUST READ