- Advertisement -
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவு வழங்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடா்ந்துள்ளது. திரைப்படங்கள் தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க ஃபெஃப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
இந்நிலையில் மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முதலில் ஓவியம் படைக்கிறேன் பின்பு வள்ளுவர் காவியம் படைக்கிறேன்- வைரமுத்து
