Homeசெய்திகள்சென்னைஆன்லைன் ட்ரேடிங்கில் அதிக லாபம் - முதியவரிடம் ரூ.7 லட்சம் மோசடி..

ஆன்லைன் ட்ரேடிங்கில் அதிக லாபம் – முதியவரிடம் ரூ.7 லட்சம் மோசடி..

-

சென்னையில் ஆன்லைன் ட்ரேடிங்கில் அதிக லாபம் ஈட்டித்தருவதாகக் கூறி முதியவரிடம் இருந்து நூதன முறையில் ரூ.7 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மியூட்சுவல் ஃபண்ட்ஸ், ஈக்விட்டீஸ், தங்கப்பத்திரம் போன்ற ஆன்லைன் ட்ரேடிங் முறைகள் சில காலங்களாக மிகப்பிரபலமடைந்து வருகிறது. அந்தவகையில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 65) ஆன்லைன் ட்ரேடிங்கில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதனைத்தொடர்ந்து ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த ஆன்லைன் டிரேடிங் விளம்பரங்களை நம்பி ரூ. 6.98 லட்சத்தை அதில் முதலீடும் செய்திருக்கிறார். பணப்பரிவர்த்தனையும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் பணம் திரும்பி வராத காரணத்தினால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் பிரசாத் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ஆன்லைன் ட்ரேடிங் மோசடி

இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் ஆய்வாளர் பத்ம குமாரி தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். தொடர் தேடுதலின்பேரில் இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜீவா என்பவரை முதலில் கைது செய்தனர். பின்னர் ஜீவாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சக்திவேல் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆன்லைன் ட்ரேடிங் மோசடி

விசாரணையின் முடிவில் ஆன்லைன் டிரேடிங் என்கிற பெயரில் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, உத்தர பிரதேஷ், பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்ததும், பலர் இவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

MUST READ