Homeசெய்திகள்சென்னைஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு –...

ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!

-

- Advertisement -

கேரள மாநிலத்தில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

we-r-hiring

குடும்பத்துடன் கொண்டாடப் படையெடுக்கும் மக்கள்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை எவ்வாறு சாதி மதங்களைக் கடந்து கொண்டாடப்படுகிறதோ, அதேபோன்று கேரளாவில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் முக்கியத் திருவிழா ஓணம் ஆகும். வரும் 26-ஆம் தேதி (புதன்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கேரள மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கியுள்ளனர். வார இறுதி விடுமுறையையும் சேர்த்துப் பயணிக்க திட்டமிட்டுள்ளதால், இன்று சனிக்கிழமை முதலே சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

விமானக் கட்டணங்கள் உயர்வு விவரம்

ரயில் மற்றும் பேருந்துகளில் பல மணி நேரம் பயணிக்க வேண்டி இருக்கும் என்பதால், பெரும்பாலானோர் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். பயணிகளின் தேவையைப் பயன்படுத்திக் கொண்டு, கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன:

  • சென்னை – கொச்சி: வழக்கமான கட்டணம் ₹5,336 | இன்றைய கட்டணம்: ₹14,843

  • சென்னை – திருவனந்தபுரம்: வழக்கமான கட்டணம் ₹5,853 | இன்றைய கட்டணம்: ₹14,700

  • சென்னை – கோழிக்கோடு: வழக்கமான கட்டணம் ₹6,158 | இன்றைய கட்டணம்: ₹17,678

  • சென்னை – கண்ணூர்: வழக்கமான கட்டணம் ₹5,655 | இன்றைய கட்டணம்: ₹12,270 (கொச்சி வழியாகச் செல்ல ₹21,694 வரை விற்கப்படுகிறது)

கூடுதல் விமானங்கள் இயக்கக் கோரிக்கை

இந்தக் கட்டண உயர்வு சொந்த ஊர் செல்லும் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பண்டிகையைக் கொண்டாடும் ஆர்வத்தில் பயணிகள் அதிகக் கட்டணம் செலுத்தியும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற முக்கியப் பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் தேர்வு, EWS இடஒதுக்கீட்டுக்கு எதிராக போர்க்கொடி! சென்னையில் தி.க.வின் பிரம்மாண்ட பைக் பேரணி!

MUST READ