மக்கள் சந்திப்பு இயக்கம் – நொச்சிக்குப்பம் மீனவர்களின் நடைபயணம் பிரச்சாரம்
சென்னைப் பட்டினப்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீனவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்று பொதுமக்களுக்கு துண்டு பிரச்சாரங்களை வழங்கி நடைபயணம் மேற்கொண்டனர்.

மக்கள் சந்திப்பு இயக்கம் நடைப்பயணமானது சீனிவாசபுரத்தில் தொடங்கி முள்ளைகுப்பம், டுமில்குப்பம் வழியாக நொச்சிக்குப்பத்தில் நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் சுந்தரராஜன் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

அப்போது மீனவ மக்கள் பல ஆண்டு காலமாக இந்தப் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் லூப் சாலையில் உள்ள மீன் வியாபாரிகளது வியாபாரத்தை தடுத்திட முயன்றனர். அதனை எதிர்த்து போராடியவர்களில் சிலரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடித்தனர்.

அந்த நடவடிக்கை தவறு என்று மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்றும் தமிழக அரசு உடனடியாக நொச்சிக்குப்பம் மீனவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். மேலும் இங்கு வாழும் மீனவ மக்களுக்கு இதேப் பகுதியில் மறு குடி அமர்வு அமைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.