Homeசெய்திகள்சென்னைசாஸ்திரி பவனை முற்றுகையிட்டு செல்வப்பெருந்தகை தலைமையில் போராட்டம் - போலீசார் வழக்குப்பதிவு

சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு செல்வப்பெருந்தகை தலைமையில் போராட்டம் – போலீசார் வழக்குப்பதிவு

-

- Advertisement -

சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய செல்வ பெருந்தகை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட 214 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு செல்வப்பெருந்தகை தலைமையில் போராட்டம் -  போலீசார் வழக்குப்பதிவுநேஷனல் ஹெரால்ட் வழக்கில் பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் என கூறி அமலாக்கத் துறையினர் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அதனை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் எரித்து கோஷமிட்டு போராட்டம் நடத்தியதால் போலீசார் கைது செய்தனர். பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதால் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ட 214 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பிரிவு செய்துள்ளனர்.

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

 

 

MUST READ