Homeசெய்திகள்சென்னைஇன்றும் நாளையும் ரெட் அலெர்ட்.. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க..

இன்றும் நாளையும் ரெட் அலெர்ட்.. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க..

-

மிக்ஜம் புயல்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும்  அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் ( டிச.5) முற்பகலில் கரையைக் கடக்க உள்ளது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்கி வரும் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது என்றும், மெதுவாக நகர்வதால் புயல் தொடர்ந்து வலுப்பெற்று தீவிர புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் எதிரொலியாக பல மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. அதன்படி இன்று ( டிச.3) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

ரெட் அலெர்ட்

மேலும், நாளை ( டிச.4) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான ரெட் அலெர்ட்டும், வேலூர், ராணிப்பைட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (டிச.3) மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை மாலை வரை கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் மணிக்கு 90 – 100 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதாலும், அவ்வப்போது 110கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாலும் மீனவர்கள் 5ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடந்துவிட்டது என தமிழக அரசு அறிவித்தபின்னர், முறையான அனுமதிச்சீட்டு பெற்றபிறகே கடலுக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

MUST READ