Homeசெய்திகள்சென்னைசென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல்... சென்னை பயணியிடம் தீவிர விசாரணை

சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல்… சென்னை பயணியிடம் தீவிர விசாரணை

-

மலேசியாலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.72 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அந்த ஆண் பயணியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று, தீவிர சோதனை\ மேற்கொண்டனர். அப்போது, அந்த பயணி தனது உள்ளாடைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து  சுமார் ரூ.72 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இது தொடர்பாக பயணியை கைதுசெய்து, தங்கம் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ