spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசாம்சங் : தொழிலாளர் போராட்டத்திற்கு அனுமதி - உயர் நீதிமன்றம்

சாம்சங் : தொழிலாளர் போராட்டத்திற்கு அனுமதி – உயர் நீதிமன்றம்

-

- Advertisement -

சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர மற்ற போரட்டத்தை வரும் 30 ம் தேதி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சாம்சங் : தொழிலாளர் போராட்டத்திற்கு அனுமதி - உயர் நீதிமன்றம்

we-r-hiring

சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் துணை நிறுவனமான எஸ். எச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச்சேர்ந்த 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதி இல்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர். வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீர்ப்புகள் உள்ளது என்றும் ஜனநாயக ரீதியாக போராட அரசியலமைப்பு சட்டம் அனுமதி அளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு வேறு வகையான போராட்டம்  நடத்த ஒப்புதல் அளித்து மனுதாரர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வரும் 30 தேதி தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தவிர மற்ற போராட்டத்தை நடத்தலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

சொத்துவரி: புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாகம் அறிமுகம் – கே.என்.நேரு விளக்கம்

MUST READ