spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை ஆமைகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை ஆமைகள் பறிமுதல்

-

- Advertisement -

மலேசியாவிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட  அரிய சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை கடத்திவந்த 2 நபர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை  வந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை கொண்டனர். அப்போது பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்த சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

we-r-hiring

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல் 

இதனால், அவர்கள் வைத்திருந்த கூடைகளை பிரித்து சோதனையிட்டபோது, உள்ளே சிவப்பு காதுகளை கொண்ட நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்தன. இதை அடுத்து இருவரையும் கைதுசெய்த சுங்க அதிகாரிகள், அவர்களிடம் இருந்த ஆமைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விமான நிலையத்திற்கு வந்த அதிகாரிகள, பறிமுதல் செய்யப்பட்ட சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை ஆய்வு செய்தனர். அதில் சுமார் 5 ஆயிரம் ஆமை குஞ்சுகள் உரிய ஆவணமின்றி சென்னைக்கு கடத்திவந்தது தெரியவந்தது.

இந்த சிவப்புக்காது நட்சத்திர ஆமைகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், வெளி நாட்டு நோய்கள், இங்குள்ள விலங்குகள், பறவைகளுக்கு பரவும் அபாயம் உள்ளதால் அவற்றை இன்று அதிகாலை விமானம் மூலம் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். மேலும் ஆமைகளை கடத்திய இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ