Homeசெய்திகள்சென்னைதவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை!

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரிடம் திருவல்லிக்கேணி காவல்துறையினர் 2-வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜி

we-r-hiring

ரூ. 35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கு:

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவின்படி, அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து 2-வது நாளாக விசாரணை:

அதன்படி, செந்தில் பாலாஜியும் அசோக்குமாரும் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது, அவர்களிடம் காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் முதல் கட்ட விசாரணை மேற்கொண்டனர்.

தனைத் தொடர்ந்து, அவர்கள் நேற்று 2-வது நாளாகக் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட நிலையில், அவர்களிடம் காவல்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.

வடசென்னை’, ‘மரியான்’-க்கு கேட்காதது ஏன்? – ‘ராயன்’ தேசிய விருது விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி!

MUST READ