Homeசெய்திகள்சென்னைசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு

-

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் மூன்றரை மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றதால், 320 பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு

சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர் இடையே இயக்கப்படும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, அதன்பின்பு இரவு 11.15 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.

இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்லும் பயணிகள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் அதிக அளவில் பயணிப்பதால், இந்த விமானத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு

அதைப்போல் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாகவே இரவு 9.55 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டது. அந்த விமானம் மீண்டும் இரவு 11.15 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக சுமார் 320 பயணிகள் இருந்தனர். விமானம் வந்ததும் பயணிகள் விமானத்தில் ஏற தயாரானார்கள்.

 

பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக, விமானி, விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்த போது, தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து விமானி, பயணிகளை விமானத்தில் ஏற்றாமல், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகள் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு

அதன் பின்பு இன்று அதிகாலையில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். அதன்பின்பு சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மூன்றரை மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 2.47 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மூன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால், 320 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் அவதிப்பட்டனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு

இதற்கிடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றபோது, விமானம் நடு வானில் திடீரென குலுங்கியதால், ஒரு பயணி உயிரிழந்ததோடு, மேலும் சில பயணிகள் காயங்கள் அடைந்தனர்.

இந்த சம்பவம் உலக நாடுகளின் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், விமானத்தில் மிகச் சிறிய அளவில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், உடனடியாக அதை சரி செய்த பின்பு, விமானத்தை இயக்க வேண்டும் என்று அனைத்து விமானிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

https://www.apcnewstamil.com/news/world-news/plane-shakes-mid-air-passenger-dies/86314

இதை அடுத்து தான், சென்னை- சிங்கப்பூர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு சிங்கப்பூருக்கு புறப்பட வேண்டியபோது, தொழில்நுட்ப கோளாறை சரி செய்த பின்பு, தாமதமாக புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

MUST READ