கார் சாவியை காணவில்லை- ரஜினி மகள் பரபரப்பு புகார்
தனது காரின் மற்றொரு சாவி, பவுச்சுடன் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அண்மையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை என புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், இதில் தொடர்புடைய வீட்டின் பணியாளர் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 சவரன் நகைகள், 30கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1கோடி மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தனது காரின் மற்றொரு சாவி, பவுச்சுடன் காணவில்லை என ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது சாவி காணாமல்போனதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.