Homeசெய்திகள்சென்னைசூப்பர் சிங்கர் ஜூனியர் கிருஷாங் முதலமைச்சரிடம் வாழ்த்து

சூப்பர் சிங்கர் ஜூனியர் கிருஷாங் முதலமைச்சரிடம் வாழ்த்து

-

தனியார் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சியில் பட்டம் வென்ற (Super singer junior) சிறுவன் கிருஷாங் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ஜூனியர் லெவல் பாடகர் போட்டியில் சமீபத்தில் வெற்றி பெற்ற சென்னை சேர்ந்த சிறுவன் கிருஷாங் தனது பெற்றோருடன் வந்து முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிறுவன் கிருஷாங், தமிழக முதலமைச்சரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் அடிக்கடி சாலையில் செல்லும் பொழுது அவருடைய கான்வாயை பார்த்து நான் மிகவும் ரசிப்பேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவ்வப்போது சாலையில் செல்லும் முதலமைச்சருக்கு தான் கையை அசைத்து காண்பிப்பேன் என்றும் அதற்கு பல நேரங்களில் முதலமைச்சர் கையை அசைத்து செல்வார் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சிறுவன் கிருஷாங், முதலமைச்சரை இன்று சந்தித்து அவர் முன்னால் பாட வேண்டும் என்று நினைத்ததாகவும், முதலமைச்சர் வேலையாக இருப்பதால் பாட முடியவில்லை எனவும் இருப்பினும் முதலமைச்சரை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தனக்கு பிடித்த ஒரு பாடல் ஒன்றை பாடிக் காண்பித்தார்.

MUST READ