Homeசெய்திகள்சென்னைதாய் தமிழ் பள்ளிகள் - தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை

தாய் தமிழ் பள்ளிகள் – தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை

-

தாய் தமிழ் பள்ளிகள் – தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளை தாய் தமிழ் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கினால் தமிழ்வழி கற்றல் அதிகரிக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய் தமிழ் பள்ளிகள் - தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை

சென்னை அம்பத்தூரில் 1993-ஆம் ஆண்டு தாய் தமிழ் மழலையர் தோட்டம் – தாய் தமிழ் தொடக்கப்பள்ளி தொடங்கபட்டது. இப்பள்ளி தனியார் தொண்டு நிறுவனம், வட அமெரிக்க தமிழ் சங்கம் மற்றும் தனிநபர் நன்கொடை பெற்று இன்று வரை செயல்பட்டு வருகிறது. இதுவரை அரசு சார்ந்து எந்த நிதி உதவியும் இப்பள்ளிக்கு கிடைக்காததால் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் சேர்க்கை ஆர்வம் குறைந்து வருவதாக பள்ளி தாளாளர் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் அரும்புகள் (Free KG), பூக்கள் (LKG,) பிஞ்சுகள் (UKG) மற்றும் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை செயல்பட்டு வருகிறது. வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் 8 ஆசிரியர்கள் மற்றும் மூன்று உதவியாளர்கள் என்று 11 ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ் வழிப்பயிற்றுவிக்கும் பள்ளி தமிழ்நாட்டில் 18 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தாய் தமிழ் பள்ளிகள் - தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை

இப்பள்ளிகளுக்கு அரசு சார்ந்து நிதி உதவிகள், சலுகைகள் கிடைத்தால் மாணவர்களுக்கு தமிழ்வழியில் நல்ல கல்வி, நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று அப்பள்ளி தாளாளர் சிவ.காளிதாசன் கூறினார்.

தாய் தமிழ் பள்ளிகள் - தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை

மேலும், இப்பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சரளா கூறியது;- தாய் தமிழ் பள்ளிகளின் நோக்கம் தாய்மொழி தமிழில் கல்வி கற்க வேண்டும் என்பது தான். வீட்டில் பெற்றோர்கள் பேசும் மொழி என்பதினால் தமிழில் கற்பதில் சிந்திக்கும் திறன் ஆற்றல் அதிகரித்து குழந்தைகளுக்கு எளிதாக புரிகிறது என்றார்.

எனவே, அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், புத்தகம், நோட்டு, பேனா, குறிப்பேடுகள் எங்கள் பள்ளிகளுக்கும் கிடைத்தால் இந்த பள்ளி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் எனவும்  மற்றும் தமிழக அரசு தாய் தமிழ் பள்ளிகளுக்கு அரசு சலுகைகள் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

MUST READ