மலேசிய நகரமான சலோப் பினாங்கு நகரத்திற்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக அந்நகரத்தின் இயற்கை காட்சி, நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் குறித்த மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் முதன்மை அதிகாரி அஸ்வின் குணசேகரன், பினாங்கு மாநில அமைச்சர் யோவ் சூன் ஹின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து, நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின் குணசேகரன், மலேசியா நாட்டின் சலோ பினாங்கு சுற்றுலாத் துறைக்கு ஏற்ற சிறந்த இயற்கை எழில் மிகுந்த நகரமாக இருக்கிறது. பினாங்கு நகரத்திற்கு இந்த ஆண்டு 2,60,000 மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத் துறையினர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

இந்தியா மலேசியா உறவு என்பது இயற்கையான ஒன்று. மலேசிய நாட்டில் தைப்பூசம் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவில் இருந்து அதிக அளவிலான மக்கள் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டனர். சலோ பினாங்கு நகரத்திற்கு சுற்றுலா வருபவர்களுக்கு சிறந்த சுற்றுலா சலுகைகள் வழங்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.


