Homeசெய்திகள்சென்னைசென்னையில் ரூ.59,000-ஐ தொட்டது ஆபரணத்தங்கத்தின் விலை!

சென்னையில் ரூ.59,000-ஐ தொட்டது ஆபரணத்தங்கத்தின் விலை!

-

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.59,000-க்கு விற்பனையாகிறது. தீபாவளி திருநாள் மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் சவரன் ரூ.58,880-க்கு வர்த்தகமான நிலையில், நேற்று சற்றே விலை குறைந்து ரூ.58,520க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, புதிய உச்சமாக சவரன் ரூ.59,000-ஐ தொட்டுள்ளது.

சென்னையில் தங்கம் விலை - 17 அக்டோபர் 2024

இதனிடையே, வடமாநிலங்களில் கொண்டாடப்படும் தந்தேராஸ் பண்டிகைக்கு அதிகளவில் தங்கம் வாங்கப்படுவதால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வடமாநிலங்ஙகளில் 5 நாட்கள் நடைபெறும் தீபாவளி பண்டிகையின் தொடக்க நாளை தந்தேராஸ் என அழைக்கப்படுகிறது. இந்நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்நாளில் மக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்ட மங்கள பொருட்களை லட்சுமி தேவி முன்பு வைத்து வழிபடுவர்.

தந்தேராஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் வடமாநில மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்குவாரகள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தீபாவளி பண்டிகைக்கு தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்பதால் தங்கத்தின் விலை நாளை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வு

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.59,000-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்த்து, ஒரு கிராம் ரூ.7,375க்கு விற்பனையாகிறது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை - தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

MUST READ