spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசைக்கிளில் வந்து அசால்ட்டாக கொள்ளையடித்த கொள்ளையன் கைது

சைக்கிளில் வந்து அசால்ட்டாக கொள்ளையடித்த கொள்ளையன் கைது

-

- Advertisement -

சைக்கிள் மூலமாகவே வந்து 40 சவரனை கொள்ளையடித்துவிட்டு சைக்கிள் மூலமாகவே அசால்ட்டாக திரும்பிச் சென்ற 57 வயது பிரபல கொள்ளையன் கைது.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவரது மனைவி பத்மாவதி (60) கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள வாஷிங் மெஷின் ரிப்பேர்  ஆனதால் அதனை சரி செய்வதற்காக வெங்கடேசன் ஆட்களை கூட்டி வருவதற்காக வெளியே சென்று இருக்கிறார்.

we-r-hiring

வெங்கடேசன் வெளியே சென்ற சிறிது நேரத்தில், வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்திருக்கிறார். தான் பிளம்பர் எனவும் வீட்டில் உள்ள சமயலறை குழாய்கள் சரியில்லை என தெரிவித்ததாக கூறியிருக்கிறார். ஆனால் பத்மாவதி சமையல் குழாய்களில் இந்த பிரச்சனையும் இல்லை துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை என கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அதனை சரி செய்வதற்காக வீட்டின் உள்ளே சென்ற அந்த நபர், சிறிது நேரத்தில் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டதாக கூறி சென்று இருக்கிறார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய வெங்கடேசன் தான் யாரையும் அனுப்பவில்லை என கூறியதால், அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகை திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது சைக்கிளில் ஒரு நபர் வருவதும் வேலையை முடித்துவிட்டு திரும்பி அவர் வில்லிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சைக்கிளிலேயே செல்வதும் தெரியவந்துள்ளது. அந்த நபர் பிரபல கொள்ளையன் ஜோதிமணி(57)எனவும் தெரிய வந்திருக்கிறது.

இவர் மீது பல காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், வயதானவர்களின் கவனத்தை திசை திருப்பி வீட்டில் உள்ள பொருட்களை திருடி செல்வது தான் இவருடைய வாடிக்கை என போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தொடர் விசாரணையில் 40 சவரன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு பேருந்து மூலமாக பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அவர் சென்றிருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து பெங்களூருக்கு விமானம் மூலம் விரைந்த தனிப்படை போலீசார் ஜோதி மணியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 16 சவரன் நகைகளை மீட்டு உள்ளனர். மீதமுள்ள நகைகளை அவர் விற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பொதுவாக ஜோதிமணி எந்த வீட்டில் திருடினாலும் அவரிடம் இருந்து பொருட்களை மீட்பது மிக கடினம் எனவும் ஆனால் இந்த முறை பாதி பொருட்களையாவது மீட்டிருக்கிறோம் என அசோக் நகர் போலீசார் தெரிவித்தனர்.

MUST READ