Homeசெய்திகள்சென்னைதக்காளி பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு - தாய்மார்கள் அதிர்ச்சி.

தக்காளி பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு – தாய்மார்கள் அதிர்ச்சி.

-

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதால் சாதாரண குடும்பப் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு - தாய்மார்கள் அதிர்ச்சி.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறி வகைகளில் தக்காளி, வெங்காயாத்தை மட்டும் ராஜா, ராணி என்று அழைக்கப்படுவார்கள். இவை இரண்டும் இல்லாமல் சமையல் இல்லை என்று சொல்லலாம். அதேபோன்று தக்காளி, வெங்காயத்தின் விலை எப்பொழுது உயரும், குறையும் என்று எவராலும் கணிக்க முடியாது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு  தக்காளியின் விலை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது கோயம்பேடு மார்கெட்டில் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று பீன்ஸ் விலை 150 ரூபாயில் இருந்து 180 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தக்காளி பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு - தாய்மார்கள் அதிர்ச்சி.

இன்றைய காய்கறி நிலவரம் மொத்த விற்பனை & சில்லறை விற்பனை:

தக்காளி -60,வெங்காயம் -26, பீன்ஸ் -150ல் இருந்து 180 வரை, கத்தரிக்காய் – 50ல் இருந்து 60 வரை, பீட்ரூட்-25, அவரைக்காய்-100, கேரட் – 60, சவ்சவ் – 60, பச்சை மிளகா -70, சேனை கிழங்கு 70, இஜ்சி -150, குடைமிளகாய்- 50, உருளைக்கிழங்கு-28ல் இருந்து 35 வரை, சின்ன வெங்காயம் -70, முருங்கை காய்-40, வெண்டைக்காய்-40, சுரைக்காய்-20, எலுமிச்சம்பழம் -100 ,கோஸ் -30, முள்ளங்கி -50, மாங்காய்-40, தேங்காய்- 1 கிலோ 36, புடலங்காய் – 25

இந்த விலையேற்றத்தினால் தினக்கூலிக்கு செல்லும் பெண்கள் மற்றும் நடுத்தர குடும்பப் பெண்கள் என்று எல்லோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ