Homeசெய்திகள்சென்னைவிஜய் : சீரடி சாய்பாபா கோயிலுக்கு பயணம்!

விஜய் : சீரடி சாய்பாபா கோயிலுக்கு பயணம்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழக தலைவரும்,  நடிகருமான விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சீரடி சாய்பாபா கோயிலுக்கு புறப்பட்டார்!விஜய் : சீரடி சாய்பாபா கோயிலுக்கு பயணம்!அடுத்த மாதம் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள தி கோட் திரைப்படம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளதால் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளார் விஜய்!

மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு நடிகர் விஜய் சென்றுள்ளார். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழக கொடியை அறிமுகப்படுத்தி கட்சியின் பாடலையும் தவெக கழக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டார்.

மேலும் அடுத்த மாதத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சீரடி சாய்பாப கோயிலுக்கு நடிகர் விஜய் சென்றுள்ளார்.  இதற்காக சென்னை விமான நிலையத்தில் உள்ள விஐபி நுழைவாயில் வழியாக சென்னை விமான நிலையம் வருகை புரிந்த விஜய் தனி விமானம் மூலமாக மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.

விஜய் : சீரடி சாய்பாபா கோயிலுக்கு பயணம்!சமீபத்தில் நடிகர் விஜய் கொரட்டூரில் அவரது தாய் சோபா அவர்களுக்கு சாய்பாபா கோவிலை கட்டி கொடுத்துள்ளார். விஜய் நடிப்பில் அடுத்த மாதம் தி கோட் திரைப்படமும் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.  இந்நிலையில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் உடன் சென்றுள்ளார்.

MUST READ