spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஎது ரீல்? எது ரியல்? மாணவர்கள் அறிந்து களத்தில் நின்று செயலாற்ற வேண்டும் – துணை...

எது ரீல்? எது ரியல்? மாணவர்கள் அறிந்து களத்தில் நின்று செயலாற்ற வேண்டும் – துணை முதல்வர்

-

- Advertisement -

இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்திகளை பரப்பும் சூழலில் எது ரீல்;எது ரியல் என்பதை மாணவர்கள் அறிந்து வாரியராக களத்தில் நின்று செயலாற்றி மக்களுக்கு உண்மை செய்திகளை கொண்டு செல்ல வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.எது ரீல்? எது ரியல்? மாணவர்கள் அறிந்து களத்தில் நின்று செயலாற்ற வேண்டும் – துணை முதல்வர்சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாட்டு நலப் பணித்திட்ட அமைப்பு சார்பில் சமூக ஊடகச் சவால்களை எதிர்கொள்வது குறித்து மூன்று நாள் மாநில அளவிலான பயிற்சி பட்டறையின் நிறைவு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, இந்த சமூக ஊடகச் சவால்கள் குறித்தான பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களை எல்லாம் பார்க்கும் போது எனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் தான் நினைவிற்கு வருகிறது. பள்ளியில் NCC யில் சேர வேண்டும் என விண்ணப்பித்தேன். ஆனால் என்னை ரிஜக்ட் செய்தார்கள். அதனால் வேறு வழியில்லாமல் NSS ல் சேர்ந்தேன். NSS ல் பயிற்சி பெற்ற நான் தான் இன்று தமிழகத்தின் துணை முதலமைச்சராக மக்கள் பணியில் இருக்கிறேன்.  என் உடைய மக்கள் பணிக்கு தொடக்கமாக என்எஸ்எஸ் இருந்தது என்றார்.

we-r-hiring

இன்றயை இளம் தலைமுறையினர் செல்போன் சமூக வலைதளத்திலே உள்ளனர். ஆனால் நீங்கள் எல்லாம் NSS சேர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறீர்கள் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து மக்களை காக்கும் NSS மாணவர்களுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை  50 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்து வழங்கி உள்ளோம் என்று சுட்டிக்காட்டினார். டெல்லியில் நடைபெறும் குடியரசு விழாவில் பங்கேற்க செல்லும் NSS மாணவர்கள் கடந்த காலத்தில் ரயில் மூலமாக சென்றனர். ஆனால் இதை அறிந்த முதலமைச்சர் விமானத்தில் செல்லவதற்கு அறிவுறுத்திய நிலையில்  தற்போது விமானம் மூலமாக அவர்கள் டெல்லி  செல்கிறா்கள்.

NSS பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தாலும் இன்றயை பயிற்சி முக்கியமானது. சமூக வலைதளங்களில்  இன்றயை தினம் அதிகம் பொய் செய்திகளும் வதந்திகளும் பரப்பி வருகிறார்கள். உண்மை எவ்வளவு வேகமாக செல்கிறதோ பொய் செய்தி மூன்று மடங்கு வேகமாக செல்கிறது. இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்திகளை பரப்புவதை அடிப்படை கொள்கையாக கொண்டு முழு நேர வேலையாக செய்து கொண்டு உள்ளனர். பொய் செய்தி மூலம் மக்களை குழப்ப வேண்டும். அவர்களை மழுங்கடிக்க வேண்டும் அதனை நோக்கமாக வைத்து கட்டுகதைகளை பரப்பி வருகிறார்கள்.

வதந்திகளில் இரண்டு வகை உள்ளது. மிஸ் இன்ஃபர்மேசன், டிஸ் இன்ஃபர்மேசன் என இரண்டும் உலக அளவில் பெரிய ஆபத்தாக உள்ளது.  மிஸ் இன்பர்மேஷன் உள்நோக்கம் இல்லாமல் பரவும் செய்தி, ஆனால் டிஷ் இன்ஃபர்மேசன் திட்டமிட்டு பரப்பும் பொய் செய்தியாக உள்ளது.  இந்த டிஷ் இன்பர்மேஷன் மிக ஆபத்தாக உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவை இரண்டும் உலகை அச்சுறுத்தும் ஆபத்தாகவும் அச்சுறுத்தலாக மாறும் என கூறினார்.

தவறாக செய்திகள் போலவே வெறுப்பு பேச்சும் அதிகமாக உள்ளது. குறிப்பாக சிறுபான்மையினர் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வெறுப்பு பேச்சுகளால் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது.  வடமாநிலங்களில் பீப் சாப்பிடுபவர்களை தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்தி பரவியது. வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் தாக்குவது போன்று காணொளி வேகமாக பரவியது. உடனே வட மாநிலங்களில் உள்ள உயர் அதிகாரிகளை தமிழகத்திற்கு வரவைத்து உண்மை நிலவரத்தை முதலமைச்சர் ஆராய செய்தார். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை முதலமைச்சர் உறுதி செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக பிறப்பால் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது அப்படி ஒன்று இருந்ததால் அதனை ஒழிக்க வேண்டும் என பேசினேன்.

அதையும் திரித்து இனப்படுகொலை தூண்டுவதாக என்மேல் பொய் செய்தி பரப்பினார்கள் எனது பேச்சை திரித்து நான் சொல்லாத விஷயத்தை கூறி ஒரு கும்பல் நாடு முழுவதும் வதந்தியை பரப்பினார்கள். இந்த விவகாரத்தில் எனது தலையை சீபவர்களுக்கு 10 லட்சம் தருகிறேன் என ஒரு சாமியார் கூறினார்.  இன்னொரு சாமியார் போட்டி போட்டுக் கொண்டு உதயநிதி தலையை சீபவர்களு்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என தனது தலைக்கு விலை பேசினார்கள். மேலும் உடனே மன்னிப்பு கோர சொன்னார்கள். மன்னிப்பு கூற மாட்டேன் யாரை வேண்டுமாலும் பார்த்துக்கொள்ளுங்கள் எந்த நீதிமன்றம் வேண்டுமானலும் சென்றுக்கொள்ளுங்கள் நான் அதனை சந்திக்க தயாராக உள்ளேன் எனவும் நான் பேசுனது தவறு இல்லை எனவும் தெரிவித்தேன். மற்ற மாநிலங்கள் போலவே தமிழ்நாடு எதையும் உடனே நம்பாது என்பதற்கு மாணவர்கள் நீங்கள் சாட்சி என கூறினார். தமிழ்நாடு தந்தை பெரியாருடைய மண் எனவும் பெரியார் என்ன கூறியிருக்கிறார் ஒரு விஷயத்தை யார் கூறினாலும் நானே கூறினாலும் அதை நம்பாதே எனக் கூறிய ஒரே தலைவர் பெரியார் தான் எனவும் தலைவர்கள் பொதுவாக பொய்யான விஷயத்தை சொல்லி அதை நம்ப வேண்டும் என கூறுவார்கள். ஆனால் பெரியார் பொய்யான விஷயத்தை யார் கூறினாலும் நானே கூறினாலும் நம்ப வேண்டாம் எனக் கூறிய ஒரே தலைவர் பெரியார் தான்.

உனது பகுத்தறிவுக்கு புத்திக்கும் எது சரிபடுகிறதோ அதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் ஏன் எதற்கு என்று எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என பெரியார் கூறியுள்ளார். அந்த வழியில் வதந்தி செய்திகளை மக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் வழிகாட்டுதலோடு அரசு சார்பாக இந்த பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உண்மை சரி பார்க்கும் குழுவினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அதனால் போலி செய்தி பரப்பக்கூடிய கும்பல் பதற்றம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு விட போலி  செய்தி பரவுவது குறைந்து வருகிறது.  அதை அடியோடு நிப்பாட்ட வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாடு உண்மை சரிபாப்பு குழுவிற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.  பொய் செய்தியை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து மூன்று ஆண்டுகளில் 47 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாணவர்களுக்கு இந்த பயிற்சி என்பது வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் வருவதில் எது Reel எது Real என்பதை நீங்கள் தான் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். களத்தில் நின்று மாணவர்கள் Warriors ஆக செயலாற்ற வேண்டும் எனவும் பொய்கள் வீழட்டும் உண்மை ஓங்கட்டும் பொய் செய்தி அற்ற சமூகத்தை ஆக்குவோம் என தெரிவித்தார். மூன்று நாட்கள் சமூக ஊடகச் சவால்கள் குறித்தான மாநில அளவிலான பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெள்ளை அறிக்கை வெளியிடாமல் திமுக அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்? – அன்புமணி கேள்வி

 

 

MUST READ