வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறையுமா? என ஏங்கிய வாடிக்கையாளர்கள் பட்ஜெட் 2024 -க்கு பிறகு தங்கம் விலை குறைந்ததை அடுத்து மகிழ்ச்சியில் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். ஆனால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது.
நேற்று (ஆகஸ்ட் 8) தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.160 அதிகரித்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.75 அதிகரித்து ரூ.6425க்கும் சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.51,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு….. அர்ஜுன் சம்பத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!
இதே போன்று 18 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.61 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5263க்கும், சவரனுக்கு ரூ.488 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42104 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.88-க்கும் ஒரு கிலோ ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.