நடிகர் ரஜினியின் சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இது தவிர கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இனிவரும் நாட்களில் இந்த இரண்டு படங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கேரளா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தது இந்த வாரம் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க இருக்கிறது. எனவே ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் கோவா சென்றுள்ளார். அப்போது விமானத்தில் அவருடன் பயணித்த ரசிகர்கள் அவரைப் பார்த்து தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்து உற்சாகமாக ஆரவாரம் எழுப்பினர்.
The shooting of #Jailer2 begins this week in Goa. A video of #Rajinikanth boarding a plane has surfaced on social media.
pic.twitter.com/ZnaMJlb41Z— Movie Tamil (@_MovieTamil) October 29, 2025

ரஜினியும் அவர்களைப் பார்த்து கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ஜெயிலர் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படம் கோலிவுட்டில் ரூ.1000 கோடியை அள்ளிவிடும் என்று நம்பப்படுகிறது.


