Homeசெய்திகள்சினிமாசூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ'.... உலகம் முழுவதும் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா?

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’…. உலகம் முழுவதும் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா?

-

- Advertisement -

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ'.... உலகம் முழுவதும் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா?

சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். காதல் கலந்த ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்துள்ளனர். கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படத்திலிருந்து வெளியான பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி (நாளை மறுநாள்) உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறை என்பதால் டிக்கெட் முன்பதிவிலும் இந்த படம் அதிக வசூலை அள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ'.... உலகம் முழுவதும் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா?இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது.

மேலும் ரெட்ரோ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ