சூர்யா 46 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வெங்கி அட்லூரி. அதைத்தொடர்ந்து இவர் துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் இயக்கி மீண்டும் வெற்றி கண்டார். அடுத்தது இவர் சூர்யாவின் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவே இதனை உறுதி செய்திருந்தார். அதன்படி தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தை விரைவில் தொடங்கி விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதன் பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் படக்குழு மீனாட்சி சௌத்ரி, மிர்ணாள் தாகூர் ஆகிய நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதற்கு முன்பாக நிதி அகர்வால், பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகிய நடிகைகளும் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. எனவே இதன்மூலம் இந்த படத்தில் ஒரு கதாநாயகியா? அல்லது இரண்டு மூன்று கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்களா? என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஒருவேளை எந்த நடிகையிடம் கால்ஷீட் கிடைக்கிறதோ அந்த நடிகையை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதா? என்ற கேள்வியும் இழந்துள்ளது. இருப்பினும் இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.