spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' ஓடிடி ரிலீஸ் எப்போது?.. நெட்பிளிக்ஸ் செய்த அதிரடி மாற்றம்!

‘தக் லைஃப்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?.. நெட்பிளிக்ஸ் செய்த அதிரடி மாற்றம்!

-

- Advertisement -

 

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக்லைப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படு தோல்வியை சந்தித்த நிலையில், ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் விரைவில் தக்லைப் ரிலீஸ் தேதியை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய படம் தக்லைஃப். ‘நாயகன்’ திரைப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் கமல் மற்றும் மணிரத்னம் காம்போவில் உருவான திரைப்படம் தக்லைஃப். இந்த படத்தை இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன ‘இந்தியன் 2’ திரைப்படம் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக இருந்த நிலையில், எப்படியும் ‘தக் லைஃப்’ திரைப்படம் கமல்ஹாசனுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

‘நாயகன்’ பட டச்சுடன், கேங் ஸ்டார் கதைக்களத்தில், கமல் – சிம்பு என இரு ஸ்டார் நடிகர்கள் நடிப்பில் வெளியான ‘தக் லைஃப்’ படத்திற்காக கமல், சிம்பு ரசிகர்கள் காத்திருந்த நிலையில் முதல்நாளே படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம், முதல் நாளில்… ரூ.46 கோடி வசூல் செய்த நிலையில், 5 நாட்களில் 75 முதல் 80 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்தில் ரூ.100 கோடியை எட்டினாலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் தோல்விப்படமே. இந்த நிலையில் தான், தக் லைஃப் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸில் திடீர் என சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை, மிகப்பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தை 4 வாரங்களில் OTTயில் ரிலீஸ் செய்தால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என கோரிக்கை வைத்து, 8 வாரத்திற்கு பின்னரே படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என அக்ரிமெண்ட் போடப்பட்டதாம்.

தக் லைஃப்’ திரைப்படம் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளதால் விரைவில் அந்த படத்தை வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ