நடிகர் ரஜினி கோவிலுக்கு சென்றுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ரஜினி, ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, நெல்சன், அனிருத் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ப்ரோமோ வீடியோவின் மூலம் படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோ இணையத்தில் செம வைரலானது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Superstar #Rajinikanth‘s Quick Temple Visit on the way to the Shoot of #Jailer2 in Anaikatti..❣️⭐
pic.twitter.com/MUg7kCKfIB— Laxmi Kanth (@iammoviebuff007) April 25, 2025
இந்நிலையில் ஆனைகட்டியில் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு செல்லும் போது வழியில் இருந்த கோவிலுக்கு சென்றுள்ளார் ரஜினி. அவர் வருவதை கண்டதும் கோவிலில் இருந்த பூசாரி ஓடோடி வந்து ரஜினியை வரவேற்று அவருக்காக அர்ச்சனை செய்து கற்பூரம் காட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் 2 படத்தில் ரஜினியை தவிர ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.