நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்தது. எனவே இந்த படம் உலக அளவில் சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதாவது அஜித்தின் கேரியரில் அதிக வசூலை வாரி குவித்த படம் என்ற பெருமையை குட் பேட் அக்லி திரைப்படம் பெற்றுள்ளது.
இதற்கிடையில் நடிகர் அஜித் துபாய், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதே சமயம் சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை திரும்பி அஜித்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று (ஏப்ரல் 29) விமான நிலையத்தில் ரசிகர்களின் கூட்டத்திற்கு இடையே வந்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அஜித்தின் காலில் சிறிய அளவில் அடிபட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே அதற்கான பிசியோ சிகிச்சைக்காக தான் நடிகர் அஜித் சென்னை, கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
