Homeசெய்திகள்சினிமா12 நிமிட காட்சிகள் நீக்கம்..... புது வெர்ஷனில் திரையிடப்பட்ட 'கங்குவா'!

12 நிமிட காட்சிகள் நீக்கம்….. புது வெர்ஷனில் திரையிடப்பட்ட ‘கங்குவா’!

-

- Advertisement -
kadalkanni

கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் கங்குவா. இதில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 12 நிமிட காட்சிகள் நீக்கம்..... புது வெர்ஷனில் திரையிடப்பட்ட 'கங்குவா'!இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இதை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்க வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். 3D தொழில்நுட்பத்தில் மிகப்பிரம்மாண்டமாக பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியிடப்பட்டது. ஆனால் திரைக்கதை வலுவாக இல்லாததாலும் பின்னணி இசை இரைச்சலாக இருந்ததாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் இந்த படம் கிட்டத்தட்ட 127 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சிலர் இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை கொடுத்தாலும் சிலர் ஆதரவு தெரிவித்த வருகின்றனர். இதற்கிடையில் இந்தப் படத்தில் பல திருத்தங்கள் செய்ய படக்குழு முயற்சித்து வந்தது.12 நிமிட காட்சிகள் நீக்கம்..... புது வெர்ஷனில் திரையிடப்பட்ட 'கங்குவா'! அதன்படி படம் வெளியான அடுத்த நாளில் இருந்து திரையரங்குகளில் இரண்டு பாயிண்ட் அளவு வால்யூம் குறைக்கப்பட்டு திரையிடப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நிகழ்கால போர்ஷனில் உள்ள 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கி உள்ளது. அதேசமயம் இசை தொடர்பான பிரச்சனையும் சரி செய்யப்பட்டு இன்று முதல் புது வெர்ஷனில் திரையிடப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ