Homeசெய்திகள்சினிமாபொங்கல் ரிலீஸுக்கு தயாரான 'வணங்கான்'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

பொங்கல் ரிலீஸுக்கு தயாரான ‘வணங்கான்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

வணங்கான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வணங்கான். பொங்கல் ரிலீஸுக்கு தயாரான 'வணங்கான்'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி, சாயா தேவி ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசைக்கான பணிகளை சாம் சி எஸ் கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும்?என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இப்படம் ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.பொங்கல் ரிலீஸுக்கு தயாரான 'வணங்கான்'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! ஆனால் ஒரு சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் (நவம்பர் 19) இன்று அருண் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த ஸ்பெஷல் போஸ்டரும், அறிவிப்பும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ