பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் SK 21 படத்திற்கும் இசையமைக்கிறார். மேலும் சூர்யாவின் 43 வது படமான புறநானூறு படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். இவ்வாறு பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது 13 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். கிங்ஸ்டன், டியர், இடி முழக்கம், ரிபெல் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கின்றன. இதனால் தற்போது பக்காவா ஸ்கெட்ச் போட்டு களமிறங்கியுள்ளார் ஜிவி பிரகாஷ். அதாவது ஒரே வருடத்தில் மொத்த படங்களையும் ரிலீஸ் செய்த விட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் ஜிவி பிரகாஷ். அதன்படி வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி ரிபெல் திரைப்படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.
அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு படங்களை ரிலீஸ் செய்ய படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த 2024 ஆம் ஆண்டில் அதிக படங்களை களம் இறக்கியவர்களின் பட்டியலில் ஜிவி பிரகாஸ் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்த 13 படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
- Advertisement -


