இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய 24 மணிநேரத்தில் 46 லட்சம் பேர் நடிகர் விஜயை பின் தொடர்ந்துள்ளனர்!
தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய், நேற்று(02.03.2023) மாலை இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். அதோடு லியோ படப்பிடப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் முதல் போஸ்ட் ஆக பதிவு செய்திருந்தார்.
நடிகர் விஜயின், அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை கேள்விப்பட்ட ரசிகர்கள் மலமலவன அவரை பின்தொடர்ந்தனர். மேலும் அவர் பதிவிட்ட முதல் படத்தையும் பகிர்ந்து கொண்டாடினர்.
சிறுது நேரத்திலேயே காஷ்மீரில் எடுத்துக்கொண்ட மற்றுமொரு புகைப்படத்தை ஸ்டோரி ஆகவும் வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சிம்புவை போல திரை துறையை சேர்ந்த பலரும் அவரை வரவேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய 24 மணிநேரத்தில் 46 லட்சம் பேர் அவரை பின் தொடர்ந்துள்ளனர். மேலும் அவர் பதிவிட புகைப்படத்திற்கு 48 லட்சத்திற்கும் மேல் லைக் செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதிவேகமாக 10 லட்சம் பின்தொடர்பவர்கள் படியலில் உலக அளவில் நடிகர் விஜய்க்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.