நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதைத்தொடர்ந்து தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது மாமன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சூரி. இந்நிலையில் தான் நடிகர் சூரி மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் இணைந்து அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இந்த ஓட்டல்கள் மதுரையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
அதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சூரியின் அம்மன் உணவகத்தின் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் சூரியின் அம்மன் உணவகத்தில் தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
செவிலியர் விடுதியில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டி இருக்கும் இடத்தில் சமையல் நடைபெறுவதாகவும் எலிகள், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் உணவுகள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த உணவகத்தில் இருந்து தயார் செய்யும் உணவுகளை தான் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுகிறார்கள். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தன்னுடைய புகாரில் கூறியுள்ளார்.
- Advertisement -