Homeசெய்திகள்சினிமாபொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்க ஆசை....பிரபல நடிகையின் பதில்!

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்க ஆசை….பிரபல நடிகையின் பதில்!

-

50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த நாவல் பொன்னியின் செல்வன். எம் ஜி ஆர் தொடங்கி பல நடிகர்கள் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சித்து அது கைகூடாமல் போனது. ஒரு வழியாக மணிரத்னம் இந்த முயற்சியில் வெற்றி பெற்றார். பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்க ஆசை....பிரபல நடிகையின் பதில்!விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக படமாக்கி வெற்றி கண்டார் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் கதையில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் நந்தினி கதாபாத்திரம். சோழர்களை பழிவாங்க துடிக்கும் பாண்டிய பெண்ணாக வரும் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அந்த கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் மிகப் பொருத்தமாக இருப்பார் எனக் கருதி மணிரத்னம் அவரை தேர்வு செய்து நடிக்க வைத்தார். இதற்கிடையில் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து தற்போது வரை பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சிம்ரன்.பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்க ஆசை....பிரபல நடிகையின் பதில்! சமீபத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்கள் விருப்பம்? என்று சிம்ரன் ஆர்வத்துடன் பதில் அளித்துள்ளார். பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தான் மிகவும் விருப்பத்துடன் இருந்ததாக கூறியுள்ளார் சிம்ரன். நந்தினி கதாபாத்திரம் ஒரு நெகட்டிவ் ஷேடு கலந்த வில்லி போன்ற ஒரு ரோல் ஆகும். ஏற்கனவே ஐந்தாம் படை, சீமராஜா போன்ற படங்களில் சிம்ரன் வில்லியாக நடித்திருந்தாலும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ