நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் வலம் வரும் டாப் நடிகர்களில் ஒருவராவார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் அஜித் தனது 64வது திரைப்படத்தை, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இது தவிர தனுஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சிறுவயதிலிருந்தே கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அஜித் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் துபாய், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்த நடைபெற்ற பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று, வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் அஜித் குறித்து பிரபல நடிகை மகேஸ்வரி சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். அதன்படி அவர், “அஜித் சார் ஒரு ஜென்டில்மேன். அவர் அழகு, கியூட். சூப்பர் ஸ்டார் என்பதை எல்லாம் விட அவர் ஒரு நல்ல மனிதர். அவர் கலாச்சாரம் தெரிந்தவர். நன்கு வளர்க்கப்பட்ட ஒருவர். எப்போதும் மற்றவர்களைப் பற்றி யோசிப்பார். நிறைய பேர் அப்படி இருக்க மாட்டாங்க” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை மகேஸ்வரி அஜித்துடன் இணைந்து உல்லாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.