spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமருத்துவ உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட பிரபல காமெடி நடிகர்!

மருத்துவ உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட பிரபல காமெடி நடிகர்!

-

- Advertisement -

உடல் நலக்குறைவால் ஒரு கை, ஒரு கால் செயலிழந்து, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவ உதவி கோரியுள்ளார்.மருத்துவ உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட பிரபல காமெடி நடிகர்!

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் வெங்கல் ராவ், ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து, தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்டண்ட் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய வெங்கல் ராவ் பிற்காலத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். ரஜினி, அமிதாப் பச்சன் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்திருக்கிறார். வடிவேலுவுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார். அந்த வகையில் சீனா தானா, எலி, கந்தசாமி உள்ளிட்ட படங்களில் வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள் இன்று வரையிலும் யாராலும் மறக்க முடியாது.

we-r-hiring

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இவர் மருத்துவ செலவிற்கு நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் தனக்கு உதவுமாறு வீடியோ வெளியிட்டு உதவி கோரியுள்ளார். அந்த வீடியோவில், “என்னால் நடக்க முடியவில்லை. பேச முடியவில்லை. மருத்துவ செலவிற்கு பணம் இல்லை. நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். சினிமா தொழிலாளர்கள், சினிமா நடிகர்கள் எனக்கு உதவி பண்ணுங்க” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் எப்படி இருந்த நடிகர் இப்படி ஆயிட்டாரே! என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ