இயக்குனர் அட்லீ, அல்லு அர்ஜுனின் புதிய படத்தில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவரை களம் இறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். அந்த வகையில் இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து ஜவான் திரைப்படத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாயை தட்டி தூக்கினார். இதைத்தொடர்ந்து இவர் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி இவர் சல்மான் கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாகவும் அதற்கு பதிலாக அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க அட்லீ பரிசீலித்து வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. எனவே அட்லீயின் 6வது திரைப்படமானது இரண்டு ஹீரோக்களின் சப்ஜெக்ட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.