spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சப்தம்' படக்குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஆதி!

‘சப்தம்’ படக்குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஆதி!

-

- Advertisement -

'சப்தம்' படக்குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஆதி!மிருகம், ஈரம், அரவான், மரகத நாணயம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஆதி. பல தெலுங்கு திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணியை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஆதி மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளியான பாட்னர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இவர் ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் சப்தம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார். திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆதி-அறிவழகன் கூட்டணியில் வெளியான ஈரம் திரைப்படம் ஒரு தரமான ஹாரர் திரில்லர் படமாக அமைந்து மாபெரும் வெற்றியை பெற்றது. 'சப்தம்' படக்குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஆதி!இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் சப்தம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.இந்நிலையில் படத்தின் நாயகன் ஆதியின் 41வது பிறந்த தினமான இன்று சப்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படமும் ஈரம் படம் போன்றே நல்ல ஒரு திரில்லர் அனுபவத்தை கொடுக்கும் என்பது இந்த போஸ்டரிலியே தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் ஆதி சப்தம் பட குழுவினருடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் பலரும் ஆதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

MUST READ