- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்கான். அவர் இந்தியில் பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது பிரபல தமிழ் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஸ்கந்தா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மும்பை பாந்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, சுவரில் தோட்டா பாய்ந்து துளை விழுந்தது. வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சியும் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், நடிகர்வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விக்கி குப்தா அனுஜ், சாகர் பால் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களின் பின்னணி குறித்து விசாரித்தனர்.




