spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பில் விபத்து- கையில் கட்டுப்போட்ட இளம் நடிகர் அபி சரவணன்..

படப்பிடிப்பில் விபத்து- கையில் கட்டுப்போட்ட இளம் நடிகர் அபி சரவணன்..

-

- Advertisement -

இளம் நடிகர் அபி சரவணன் சண்டை காட்சியின் போது, தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டுள்ளது. பைக்கில் இருந்து விழுந்து விபத்து ஏற்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கேரள நாட்டிலம் பெண்களிலே’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அபி சரவணன். மதுரையைச் சேர்ந்த அவர் டூரிங் டாக்கீஸ் சாகசம், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற தமிழ், மலையாளம் என பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அண்மையில் கூட இவர் நடித்த ‘சாயம்’ என்கிற படம் வெளியானது. தற்போது இவர் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக்கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Actor Abi Saravanan - நடிகர் அபி சரவணன்

we-r-hiring

இந்நிலையில் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு, பிரபல சுற்றுலா தலமான சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் நடைபெற்று வந்தது. சண்டை காட்சி படமாக்கப்பட்டபோது பைக்கில் இருந்து குதிக்கும் காட்சியை எடுத்துள்ளனர். அப்போது தவறி கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வலியால் துடித்த அபி சரவணனை படக்குழுவினர் சேலம் ஐந்துரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபி சரவணன் பைக்கில் இருந்து கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ