Homeசெய்திகள்சினிமாமலையாளத்திலும் அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்!

மலையாளத்திலும் அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்!

-

மலையாளத்திலும் அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்!நடிகர் அர்ஜுன் தாஸ் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அர்ஜுன் தாஸ் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். அதன்படி இவரின் குரலுக்கு பெண் ரசிகர்களும் இருக்கிறார்கள்.  இவர் தற்போது பல படங்களில் ஹீரோவாக களம் இறங்கி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி அர்ஜுன் தாஸ் அந்தகாரம் எனும் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து கடைசியாக வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அநீதி திரைப்படத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ரசவாதி போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் தெலுங்கிலும், இந்தியிலும் என்ட்ரி கொடுத்தார் அர்ஜுன் தாஸ். மலையாளத்திலும் அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்!தற்போது மலையாள சினிமாவிலும் அர்ஜுன் தாஸ் அடி எடுத்து வைக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி மலையாளத்தில் அர்ஜுன் தாஸ் அறிமுகமாகும் புதிய படத்தை அஹமது கபீர் இயக்க இருக்கிறார். படத்திற்கு ஹேஷம் அப்துல் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படம் ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ