spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் உடலுக்கு நடிகர் பாக்யராஜ் நேரில் சென்று அஞ்சலி!

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பாக்யராஜ் நேரில் சென்று அஞ்சலி!

-

- Advertisement -

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பாக்யராஜ் நேரில் சென்று அஞ்சலி!பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் பிரிவு தமிழக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தற்போது அவரது உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள் பலரும் நீண்ட நேரமாக வரிசையில் நின்று கண்ணீர் மல்க விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே சமயம் அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப்பட பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பாக்கியராஜ் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்தின் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் தங்களின் ஆறுதல்களையும் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பாக்யராஜ் நேரில் சென்று அஞ்சலி!அதைத் தொடர்ந்து பாக்கியராஜ் விஜயகாந்த் குறித்து, “விஜயகாந்த் ஒரு சரித்திரம் படைத்த சகாப்தம். அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக இருந்தார். அவரின் குடும்பத்தினர் உறவினர் ரசிகர்கள் தொண்டர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் விஜயகாந்த் நடிப்பில் சொக்கத்தங்கம் திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ