spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபணம் இல்லை என்றாலும் வருத்தப்பட மாட்டேன்.... நடிகர் ஜெயம் ரவி பேச்சு!

பணம் இல்லை என்றாலும் வருத்தப்பட மாட்டேன்…. நடிகர் ஜெயம் ரவி பேச்சு!

-

- Advertisement -

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவர் பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பணம் இல்லை என்றாலும் வருத்தப்பட மாட்டேன்.... நடிகர் ஜெயம் ரவி பேச்சு!அந்த வகையில் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெயம் ரவி. அதே சமயம் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இவர்களின் விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவிற்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்கள் செய்திகள் பரவத் தொடங்கியது. அதன் பின்னர் “இருவரும் நண்பர்கள் தான். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரையும் நுழைக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி. அதைத்தொடர்ந்து ஆர்த்தி இடமிருந்து தனது இரண்டு மகன்களையும் மீட்டெடுப்பேன் என கூறியிருந்தார். பின்னர் தனது உடைமைகளை ஆர்த்தி இடம் இருந்து பெற்றுத் தருமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.பணம் இல்லை என்றாலும் வருத்தப்பட மாட்டேன்.... நடிகர் ஜெயம் ரவி பேச்சு! அடுத்தது ஆர்த்தி தன்னை டார்ச்சர் செய்ததாகவும், பத்து ரூபாய் செலவு செய்தாலும் அதற்கு கணக்கு கேட்பார் எனவும் கூறியிருந்தார். மேலும் தனது மாமியார் பண விஷயத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இந்த விவாகரத்தில் தனக்கு விருப்பம் இல்லை என கூறியிருந்தார். இவ்வாறு ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்றுள்ளதாகவும் தனது இருப்பிடத்தை அங்கு மாற்றி இருப்பதாகவும் தகவல் வெளியானது. பணம் இல்லை என்றாலும் வருத்தப்பட மாட்டேன்.... நடிகர் ஜெயம் ரவி பேச்சு!தற்போது நடிகர் ஜெயம் ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் சிறுவயதிலிருந்தே நிறைய பணத்தை பார்த்திருக்கிறேன். என் தந்தை சம்பாதித்த பணத்தை கட்டுக் கட்டாக கொண்டு வந்து கொடுப்பார். ஆனால் எனக்கு பணத்தின் மீது பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது. பணம் இல்லை என்று வருத்தப்பட மாட்டேன். பணம் இல்லையென்றால் என்ன? கை, கால் இருக்கு, நல்ல திறமை இருக்கு என்று தான் நினைப்பேன். மேலும் சினிமாவில் மக்கள் எனக்கு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அதற்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஈடே ஆகாது” என்று உருக்கமாக பேசியிருக்கிறார் ஜெயம் ரவி.

MUST READ