Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் கவின்!

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் கவின்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ட்ரெயின், ஏஸ், விடுதலை 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் கவின்!இதற்கிடையில் விஜய் சேதுபதி மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். இதனை விதார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அஜனீஷ் லோக்நாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் கவின்!எனவே(நேற்று) ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் வெளியான இந்த படமானது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் எமோஷனல் காட்சிகள் நிறைந்த வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருந்தது. அதிலும் சமீப காலமாக வெளியான படங்கள் விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் கை கொடுக்காமல் போன நிலையில் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகர்கள் மகாராஜா படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் கவின்!அந்த பதிவில், “மகாராஜா படத்தின் எமோஷனல் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. விஜய் சேதுபதி அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தைப் பார்த்த பின் என் இதயம் கனமாக இருக்கிறது. ஆனாலும் இயக்குனர் நித்திலனுக்காக மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர்களான ஜெகதீஷ், சுதன் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ