spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அரசியலற்ற ஆனந்தம்'.... ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன்!

‘அரசியலற்ற ஆனந்தம்’…. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன்!

-

- Advertisement -

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன்!'அரசியலற்ற ஆனந்தம்'....ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன்!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவர் தனது படங்களில் புதுமைகளை கையாளக்கூடியவர். கடைசியாக இவர் சிறுவர்களை வைத்து டீன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதன் பின்னர் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன், ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்கலகிரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. பவன் கல்யாண்- பார்த்திபன் ஆகிய இருவரும் சமூகப் பிரச்சினைகள் குறித்து பேசி உள்ளனர்.

we-r-hiring

அப்போது பவன் கல்யாண், பார்த்திபனுக்கு கடவுள் சிலைகளை வழங்க, நடிகர் பார்த்திபன் பவன் கல்யாணுக்கு ஒரு வீரரின் ஓவியம், தான் எழுதிய பேனா, புத்தகம் ஆகியவற்றை கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து இருவரும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், இது தொடர்பான வீடியோவை குறிப்பிட்டு “அரசியலற்ற ஆனந்தம்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ