Homeசெய்திகள்சினிமாடெல்லியில் மோடி பதவியேற்பு நிகழ்ச்சி... பங்கேற்பது குறித்து ரஜினிகாந்த் கொடுத்த பதில்...

டெல்லியில் மோடி பதவியேற்பு நிகழ்ச்சி… பங்கேற்பது குறித்து ரஜினிகாந்த் கொடுத்த பதில்…

-

- Advertisement -
kadalkanni
வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்த ரஜினிகாந்த் ஓய்வெடுக்க அபுதாபி சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் ஆன்மிக பயணத்திற்கு புறப்பட்டார். ஆண்டுதோறும் அவர் ஆன்மிக பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஒரு வாரகால ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியிருக்கிறார்.

சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள என் அருமை நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு, மற்றொரு நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக ரஜினிகாந்த் கூறினார்.

அவரிடம் டெல்லியில் நடைபெற இருக்கும் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், அது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கவில்லை என்று கூறினார். இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் வரும் 10-ம் தேதி ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.

MUST READ