நடிகர் ராம்கி, விவேக் குறித்து பேசி உள்ளார்.மறைந்த நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு நகைச்சுவை நடிகராக தன் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதாவது இவருடைய நகைச்சுவை பலரையும் சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும். தெலுங்கு இவர் உயிருடன் இருக்கும் போது பல்வேறு நலத்திட்டங்களை செய்திருக்கிறார்.
அதில் முக்கியமானது லட்சக்கணக்கான மரங்களை நட்டு மரங்களில் நாயகனாக வாழ்ந்து வந்தார் விவேக். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இவர் நட்டு வைத்த மரங்களின் மூலம் உயிருடன் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் விவேக் மற்றும் ராம்கி ஆகிய இருவரும் இணைந்து விஸ்வநாதன் ராமமூர்த்தி, எனக்கொரு மகன் பிறப்பான் ஆகிய பல படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ராம்கி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விவேக் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “சினிமாவில் எத்தனையோ பேருடன் பழகி இருக்கிறோம்.
ஆனால் விவேக் என்பவர் நண்பனையும் தாண்டி, குடும்ப நண்பன் என்று கூட சொல்ல முடியாது. அதைவிட அதிகமான ஒரு அன்பு அவருக்கும் எனக்கும் இருந்தது. அவரும் என் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார். படப்பிடிப்பில் இருக்கும் போது என்னை நிறைய சிரிக்க வைப்பார். அந்த அளவிற்கு பழகிய அவருடைய படங்களை நான் இப்போது பார்க்க மாட்டேன். ஏனென்றால் அந்த படங்களை பார்க்கும் போது விவேக்கின் நினைவுகள் தான் எனக்கு வரும். அவர் அந்த காட்சியில் காமெடிதான் பண்ணிக் கொண்டிருப்பார். ஆனால் அந்த காட்சிக்கு பின்னால் இருக்கும் ஞாபகங்கள் எனக்கு வந்து போகும்” என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
- Advertisement -