மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் மரகத நாணயம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், டேனியல் போப், ராம்தாஸ், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இரும்பொறை எனும் மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயம் இந்த நூற்றாண்டில் வாழும் மனிதர்களின் கையில் கிடைக்கிறது. ஆனால் அந்த மரகத நாணயம் யாருக்கெல்லாம் கிடைக்கிறதோ அவர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள். அதற்கு அந்த இரும்பொறை என்ற மன்னனின் ஆவி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இதனை படத்தின் நாயகன் ஆதி கைப்பற்ற முயற்சிக்கிறார். கடைசியில் அதை கைப்பற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. எனவே அடுத்தது மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதன்படி நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோரும் மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிக்க போவதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது இரும்பொறை மன்னன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் சத்யராஜ். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரத்தில் அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.